ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.
பாம்பூர் பைபாஸில் இன்று நிகழ்ந்த தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 சிஆர்பிஎப் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள டங்கன் பைபாஸ் அருகே சிஆர்பிஎப் வீரர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட் பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.