வேலூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தந்தை பெரியார் சிலையை உடைத்த பா.ஜ.க.வினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூகவலைதளங்களிலும் எதிர்ப்புகள் குவிந்தன. இதையடுத்து அந்தப் பதிவை ராஜா, நீக்கினார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இருக்கும் பெரியார் சிலை, இரவு உடைக்கப்பட்டது.
சிலையை உடைத்த பாஜக பிரமுகர் முத்துராமன் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து அடித்தனர். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
[youtube-feed feed=1]