சான்பிரான்சிஸ்கோ: டிவிட்டரில் கட்டணத்துடன் கூடிய ‘புளு டிக்’ வசதி இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

டிவிட்டரை கைப்பற்றிய உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அந்நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியுடன், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவரது முதல் நடவடிக்கையாக புளுடிக் வசதி பெற வேண்டுமானால் கண்டனம் என அறிவித்து, அதன்படி மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தார்.

டிவிட்டரை உபயோகப்படுத்தும், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, டிவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் டிவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பிய எலான் மஸ்க், அதற்கு கட்டணத்தை அறிவித்தார்.

இதற்கு கடும்  இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதை கண்டுகொள்ளாத மஸ்க், மணம் கட்டினால்தான், புளுடிக் வசதி என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் எராளமான போலி கணக்குகள்  உருவாகின. இதனால் தற்காலிகமாக  ‘புளூ டிக்’ வசதி  நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் டிவிட்டரில் மீண்டும் ‘புளூ டிக்’ வசதி கிடைக்கும் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  ‘புளூ டிக்’ வசதியை பெற மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.659) கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவித்துள்ளதுடன், கட்டணம் செலுத்துபவர்களின் வணிக கணக்குகளுக்கான சரிபார்ப்பு தொடங்கும் எனவும், அதன் பின்னர் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்ப்பு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.