மும்பை:
ந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் கேப்டன் தோனியின் ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ப்ளூ ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.

பிரபலங்கள் பெயரின் மூலம் போலி கணக்கை உருவாக்கி அதில் சர்சைக்குரிய, அவதூறு கருத்துகளை யாரேனும் வெளியிடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள, ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களின் ட்விட்டர் பக்கத்தின் ஆய்வு செய்து அதன் உண்மைத்தன்மையை அங்கீகரித்து விட்டால் அதற்கான அறிகுறியாக ப்ளூ டிக் வழங்கி வருகிறது.

ட்விட்டரில் ஆக்டிவாக இல்லாதவர்களின் கணக்கில் இருந்து ப்ளூ டிக்-கை நீக்கி விடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் கேப்டன் தோனி நீண்ட காலமாக லாக்கின் செய்யமால் இருந்ததால், ப்ளூ டிக் -கை ட்விட்டர் நிறுவனம் நீக்கி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அவரது ரசிகர்கள் மத்தியில் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மீண்டும் ப்ளூ டிக்கை வழங்கியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், நீண்ட காலமாக லாக்இன் செய்யப்படாத கணக்குகளின் ப்ளூடிக் தானாகவே நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 8.20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.