ரஜினிகாந்த் நடித்து உருவாகி உள்ள படம் காலா.   இந்த திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.    இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுல்ளது.

ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படம் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின் வெளிவரும் படம் ஆகும்.   இதனால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் இடையே மேலும் எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது டிவிட்டர் இந்த காலா திரைப்படத்துக்கா பிரத்யேக எமோஜியை உருவாக்கி உள்ளது.   அதன்படி # டைப் செய்து அதன் பிறகு காலா என டைப் செய்தால் அது எமோஜியாக மாறி விடும்.   இது ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை உண்டாக்கி இருக்கிறது.