மும்பை

ந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிவிட்டரில் பிரத்தியேக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மற்ற எல்லா விளையாட்டுகளையும் விட கிரிக்கெட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.   இவர்களைக் கவுரவிக்கும் வகையில் சமூக வலை தளமான டிவிட்டரில் ஒரு  பிரத்தியேகப் பிரிவின் முன்னோட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  தற்போது இது இந்தியாவில் ஆண்டிராய்டில் டிவிட்டரைப் பயன்படுத்தும் சில பயனாளிகளுக்குக் கிடைக்கும்.

டிவிட்டரின் இந்த பிரிவின் மூலம் ரசிகர்கள் பிரத்தியேக வீடியோ உள்ளடக்கம், நிகழ் நேர ஆட்டப் புதுப்பிப்புகளை வழங்கும் ஸ்கோர் போர்டு, ஊடாடும் விட்ஜெட்களை அணுக முடியும். மேலும் ஆங்கிலம், இந்தி, வங்காளம் , குஜராத்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏழு இந்திய மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட குழு எமோஜிகளை பயன்படுத்தி ரசிகர்கள் தங்கள் அணிகளை உற்சாகப் படுத்த முடியும்.

இந்தியாவின் டிவிட்டர் தயாரிப்பு இயக்குநர் ஷிரிஷ் அந்தரே இது குறித்து,

“எங்கள் புதிய கிரிக்கெட் பிரிவின் மூலம், மக்கள் தொடர்புடைய மற்றும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தைக் கண்டறிவதை எளிதாக்கவும் ரசிகர்களிடையே உரையாடலை ஊக்குவிக்கவும் விரும்புகிறோம். மேலும் இவை அனைத்தையும் போட்டி நிகழும் நேரத்தில் ஸ்கோரைக் காணும். வகையில் வேறு எங்கும் கிடைக்காத நேரடி விளையாட்டு அனுபவத்தை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம் ”

எனத் தெரிவித்துள்ளார்.