விஜய் – அஜித் ரசிகர்களுக்கு இடையேயான போட்டி அவ்வப்போது ட்விட்டரில் தலை தூக்கும் .ஆனால், விஜய் – அஜித் இருவருமே ட்விட்டர் தளத்தில் இல்லை.
விஜய் தரப்பிலிருந்து அவருடைய அலுவலகத்திலிருந்து ஒரு கணக்கு நடத்தி வருகின்றனர் . அதில் விஜய் படங்களின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர்கள் உள்ளிட்டவை மட்டுமே அந்தக் கணக்கில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் அஜித் தரப்பில் அது கூட கிடையாது .
இதுகுறித்து ட்விட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோ கூறுகையில் “நடிகர் அஜித் சமூக வலைதளங்களிலோ ட்விட்டரிலோ இல்லை, ஆனால் அவருடைய #தல ஹேஷ்டேக் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.”அஜித் ட்விட்டருக்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக அவரது ரசிகர்கள் அவரது படங்களையும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதையும் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார் .