ட்விட்டரில் பதிவுகளை நீக்க கோரி ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.
விவசாய சட்டம், கொரோனா கால நிர்வாக குளறுபடிகள், உதய்பூர் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கருத்துகளை நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியிருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்தை நிர்பந்தம் செய்வதாக கூறி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.