கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.
தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் இச்செய்தியை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் கூட செய்யவில்லை. எனவே அவர் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழில் உருவாகிவுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது சிங்கிள் பாடலான ‘நேத்து…’ என்கிற தனுஷ் எழுதி, பாடியுள்ள பாடல் வெளியானது .
இப்படத்திலிருந்து வெளியான ‘ரகிட ரகிட…’, ‘புஜ்ஜி…’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
தற்போது விளம்பரப்படுத்தும் பணியில் ஒரு அங்கமாக ட்விட்டர் எமோஜியை வெளியிட்டுள்ளது படக்குழு. ட்விட்டர் தளத்தில் #JagameThandhiram, #JagameThandhiramOnNetflix, #LetsRakita, #Rakita மற்றும் #Suruli ஆகிய ஹேஷ்டேக்குகளை வைத்து ட்வீட் செய்தால் எமோஜி வருவது போன்று படக்குழு வடிவமைத்துள்ளது. இந்த எமோஜியில் தனுஷின் புகைப்படம் இல்லாமல், வழக்கமாக இருக்கும் ஐகானில் மீசை மட்டும் இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், ட்விட்டர் எமோஜி கொண்ட முதல் படமாக ‘ஜகமே தந்திரம்’ அமைந்துள்ளது. இந்த ட்விட்டர் எமோஜி செப்டம்பர் 2-ம் தேதி வரை ட்விட்டர் தளத்தில் இருக்கும்.