சான்பிரான்சிஸ்கோ:

பிரபல சமுக வலைதளமான டிவிட்டர் வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ-CEO) கணக்கை, இணையதள ஹாக்கர்கள் ஹாக்கிங் செய்து, அவரை பின்தொடர்பர்களுக்கு  அவதூறு பதிவுகள் பதிவிடப்பட்டு உள்ளன.

சமூக வலைதளமான டிவிட்டரின், சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வருபவர் ஜாக் டோர்சி ( jack doresey ). இவரை டிவிட்டர் கணக்கை யாரோ ஹாக்கிங் செய்துள்ளனர். முன்னதாக அவரது கணக்கை பின்தொடரும் 4 மில்லியன் பயனர்களுக்கும், இனவெறி மற்றும் சாபச் சொற்கள் உள்பட பல பொது டிவிட்கள் போடப்பட்டு உள்ளது.

இதையறிந்த டிவிட்டர் நிர்வாகம், அதுபோன்ற பதிவுகளை உடனடியாக நீக்க முயற்சி எடுத்தது. அப்போதுதான் அவரது கணக்கு ஹாக்கிங் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. தற்போது, அவரது கண்கை மீட்பதற்கும், அவர் கணக்கில் இருந்து பயனர்களுக்கு சென்ற தேவையான பதிவுகளை நீக்குவதற்கும் டிவிட்டர் தொழில்நுட்ப அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

பொதுவாக சமூக வலைதளங்கள் மூலமே வதந்திகளும், வன்முறைகளும் பரவி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் கணக்கையே பாதுகாக்க முடியாத செயல் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.