இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி, ஒவ்வொருவர் வீட்டிலும் பாதிப்பையும் வேதனையையும் உண்டாக்கி இருப்பதோடு நிர்வாக சீரழிவு காரணமாக மோடி அரசின் செல்வாக்கையும் சரித்துள்ளது.

 

காங்கிரஸ் கட்சி பெயரில் போலி கடிதம் ஒன்றை தயாரித்து ட்விட்டரில் பதிவிட்டதை குறிப்பிட்டு, தனக்கு பழக்கப்பட்ட மதமோதலை உருவாக்கி சரிந்த செல்வாக்கை சரிசெய்யும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருவதை, டெல்லி காவல் துறையினரிடமும் ட்விட்டர் நிறுவனத்திடமும் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பதிவிடுவது பா.ஜ.க. வினரின் மரபணுக்களில் ஊறிப்போன ஒன்று என்று காங்கிரஸ் கட்சியின் ஆய்வு பிரிவு தலைவர் ராஜீவ் கவுடா கொடுத்த புகாரை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது, போலி செய்தியை வெளியிட்ட பா.ஜ.க. வின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா-வின் சர்ச்சைக்குரிய பதிவை, திரித்துக்கூறப்பட்ட செய்தி என்று முத்திரை குத்தியிருக்கிறது.

மோடியுடன் – பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா

கொரோனா பெருந்தொற்றால் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்களை பற்றி கவலை படாமல் அவர்களை திசை திருப்ப பா.ஜ.க. செய்துவரும் தில்லுமுல்லு வேலைகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்திருக்கின்றன.