சென்னை,
இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு முன்கூட்டியே முதல்வருக்கு தரப்பட்டதா என தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், டிடிவி தரப்போ, அப்பபடி எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியிடப்படவில்லை என்று கூறி வந்தனர்.
இன்று காலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபோது, இரட்டை இலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, முதல்வர் மகிழ்ச்சியாக இரட்டை இலை தங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறினார். பெரும்பாலான எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் எங்களுக்கே கிடைக்கும் என்று நம்பியதாகவும் கூறினார்.
ஆனால், டிடிவி தரப்பினரோ இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பி உள்ளது. இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், தேர்தல் ஆணையத்திடம் இருந்து, இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல்தான் அளவில், இரட்டை இலை யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.