டில்லி,
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி அளவில், தேர்தல்ஆணைய வலைதளத்தில், இரட்டை இலை யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்தால் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.
இதுகுறித்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு அதிமுகவின் அதிகாரப்பூர்வமான சின்னமான இரட்டை இலை மற்றும் அதிமுக பெயர் மற்றும் அதற்கான உரிமையை ஒருங்கிணைந்த இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ள டில்லியில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.