சென்னை:
பிரபல இருச்சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி, குறிப்பட்ட மாடல் டிவிஎஸ் வாகனத்தை, தகுந்த ஆதாரங்களும் இப்போதே வாங்கிக்கொண்டு, 6 மாதம் கழித்து ஈஎம்ஐ கட்டலாம் என்று சலுகை வழங்கி உள்ளது.
கொரோனாவால் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழில் நிறுவனங்கள் மெல்ல மெல்ல தங்களது உற்பத்தியைத் தொடங்கி வருகின்றன.
பெரும் சரிவை எதிர்கொண்டுள்ள வாகன உற்பத்தி நிறுவனங்களும், தற்போதுதான் தங்களது விற்பனையை மீண்டும் தொடங்கி உள்ளன. கொரோனாவால் உலகம் எதிர்கொள்ளும் சோதனையை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை வாங்க உதவும் திட்டங்களை முன்வைக்கின்றன.
இந்த நிலையில், இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் நிறுவனம் குறிப்பிட்ட மாடலான டிவிஎஸ் எக்ஸ்எல் 100 என்ற வாகனத்தை தகுந்த ஆவனங்களுடன் பதிவு செய்து எடுத்துக்கொள்ளலாம் என்றும், 6 மாதம் கழித்த இஎம்ஐ கட்டத்தொடங்கலாம் என்று சலுகையை அறிவித்து உள்ளது.
டி.வி.எஸ் எக்ஸ்எல் 100 க்கான ‘ஆறு மாதங்களுக்குப் பிறகு செலுத்துங்கள்’ என்ற இ.எம்.ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இந்த இருசக்கர வாகனமான டிவிஎஸ் எக்ஸ்எல் 100 99.7 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 6,000 ஆர்பிஎம்மில் 4.3 பிஎஸ் சக்தியையும் 3,500 ஆர்பிஎம்மில் 6.5 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
டிவிஎஸ் அறிவித்துள்ள இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்எல் 100 ஐ உடனடி பயன்பாட்டிற்காக வாங்க அனுமதிக்கிறது, மேலும் நிறுவனம் அவர்களுக்கு ஆறு மாத கால அவகாச கால அவகாசத்தை வழங்கும். இதன் பொருள் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் ஈ.எம்.ஐ.களில் ஆறு மாத விடுமுறையைப் பெறுவார்கள், அதன் பிறகு அவர்கள் பணம் செலுத்தத் தொடங்கலாம். இந்த திட்டத்திற்கான மதிப்பு 75 சதவீதமாக இருக்கும் என்று டி.வி.எஸ். நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வாகனங்களில் எந்த விற்பனையும் இல்லை, கடநத் மே மாதத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
இதன் காரணமாக, பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதி ரீதியாக உதவ எளிதான ஈ.எம்.ஐ திட்டங்களையும் பிற சலுகைகளையும் வழங்கி வருகின்றன.