சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக பெற்ற வெற்றியானது,  கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி,  என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிளுகிளுப்பைக் காட்டி குழந்தையை வசீகரிப்பவர்களிடம் குழந்தைகள் செல்லும்… ஆனால் தாயிடம் தான் அந்த குழந்தை திரும்பி வரும்! கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்று தராது என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அரசியலில் திமுக தோற்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் கொள்கை அரசியலில் ஒருபோதும் தோற்றதில்லை என கூறிய உதயநிதி,   கடந்த 10 நாட்களிலேயே பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சிபற்றி உணர தொடங்கி விட்டனர். குழந்தைகளுக்கு கிலுகிலுப்பையை காட்டி அழைப்பது போல, கவர்ச்சி மாயாஜாலாம் காட்டி வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக வெறும் அரசியல் இயக்கம் கிடையாது; இது ஒரு சமுதாய இயக்கம் என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் .

வாரிசு அரசியல் மூலம் தமிழ்நாடு அரசியலில்  புகுந்து, தற்போது, முன்னாள் முதலவரின் மகன் எனற் ஒரு காரணத்திற்காக மட்டுமே  எதிர்க்கட்சி தலைவராக உள்ள உதயநிதி, தவெகவின் வெற்றியை கவர்ச்சி மூலம் பெற்ற  விமர்சித்துள்ளது  அவரது இயலாமையை வெளிப்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]