சென்னை: தவெக ஆதரவு பெண்கள் “விபச்சாரிகள் என அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அருவருக்க தக்க வையில் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
தவெக பெண்களை விபச்சாரி என்று கூறிய விவகாரத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்பு கேட்கவே முடியாது, அப்படித்தான் சொல்வேன் என்று மீண்டும் பேசியிருப்பது, அவர்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
நடிகைகள் திரிஷா, மற்றும் நயன்தாரா குறித்து விமர்சித்தவர்கள் மீது கொந்தளித்த சமூக ஆர்வலர்கள், திரையுலகினர், இந்த விவகாரத்துக்கு வாய் திறக்காமல் மவுனம் காப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகராக பொறுப்புவகித்த பொன்ராஜ், தற்போது அரசியல் விமர்சகர் என்ற பெயரில் திமுகவின் ஆதரவாளராக பேசி வருகிறார். இவர் தவெக பெண் தொண்டர்களை விபச்சாரிகள் என்று தரக்குறைவாக விமர்சித்து பேட்டி அளித்தார். அவரது விமர்சனத்திற்கு தவெக நிர்வாகிகளும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஊடகம் ஒன்று, அவரிடம் கேள்வி எழுப்பியது. அப்துல் கலாம் ஆலோசகராக இருந்த நீங்கள் ஒரு அரசியல் விமர்சகராக விபச்சாரி என்று பேசுவது சரியா? என்ற கேள்விக்கு, அந்த மாதிரி பேசுபவர்களை வேறு எப்படி கூப்பிடுவார்கள். அப்படித்தான் கூப்பிடனும். அக்காவா இருப்பேன், தங்கச்சியா இருப்பேன், பொண்டாட்டியா இருப்பேன்னு சொன்னா என்ன அர்த்தம். இப்படிப்பட்ட தற்குறி கூட்டத்தை உருவாக்கி வச்சிருந்தால் என்ன அர்த்தம்? என்றவர், இவ்வாறு யார் சொல்கிறார்களோ அவர்களுக்குத்தான் இது (விபச்சாரி) பொருந்தும். அந்த மாதிரி யார் பேசுகிறார்களோ அவர்களுக்குத்தான் இது பொருந்தும் என்றார்.
இந்த தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கமாட்டீர்களா? என்ற கேள்விக்கு‘, ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? பொதுவெளியில் அக்காவாகவும் இருப்பேன், தங்கச்சியாகவும் இருப்பேன், பொண்டாட்டியாகவும் இருப்பேனு சொல்லும் பெண்பிள்ளைகள் எதிர்கால தலைமுறைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறது? மண்டையில கொட்டுனாதானே தெரியும் என்றவர்,
அரசியல் கட்சித் தலைவராக இந்த வார்த்தையை பயன்படுத்துவது சரியான நிலைப்பாடுதான். இந்த ஆட்களுக்கு இப்படித்தான் பேசி ஆக வேண்டும். வேறு வழியில்லை என்றவர், இவ்வாறு பேசியதற்காக நான் பின்வாங்கப்போவது இல்லை.

எதற்கு பின்வாங்க வேண்டும்? என எதிர்கேள்வி எழுப்பியவர், விபச்சாரியை விபச்சாரினுதான் சொல்ல வேண்டும். இதைப் பார்த்து 10 பிள்ளைகள் பேசும். எப்படிப்பட்ட இளைய தலைமுறையை உருவாக்குறீங்க? கனவு காணச் சொல்லியிருக்கிறார் அப்துல்கலாம். இந்த கழுதைகள் எப்படி கனவு காண்கிறார்கள்? என கடுமையாக சாடினார்.
அப்துல்கலாம் போல பெரிய மனுஷனாக பேசியிருக்கலாமே என்றதற்கு, அரசியலில் இறங்கியாச்சு. அந்த சாக்கடை மேலே விழத்தான் செய்யும். அந்த சாக்கடையை சுத்தப்படுத்த இறங்கித்தான் சுத்தப்படுத்த வேண்டும் என்றவர்,
விபச்சாரி என்ற வார்த்தையைப் பயன்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ற கேள்விக்கு, யார் சொன்னார்களே அவர்களை அப்படித்தான் கூப்பிட முடியும் என்று திமிராக கூறினார்.
இதையடுத்து நெறியாளர், உங்கள் வீட்டுப் பெண்கள் இப்படி பேசினால் நீங்கள் இப்படித்தான் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு, யாராக இருந்தாலும் இப்படித்தான் பேசுவேன். நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் இப்படி பேசமாட்டார்கள். எந்த குடும்பத்தில் பேசினாலும் இவர்களை இப்படி கையாண்டால் மட்டுமே இவர்களுக்கு புத்தி வரும். நான் தவறாக நினைக்கவில்லை. நான் கவலைப்படப்போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]