சென்னை

வெக தலைவர் விஜய் குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு தவெக பொதுச் செயலர் பதிலடி கொடுத்துள்ளார்.

டாஸ்மாக் மோசடி விவகாரம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், பா.ஜ.க.வும், தி.மு.க.வும் புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாக விமர்சித்திருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை,

“டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது? மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன? நான் நடிகர் விஜய் போன்று நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு, நடமனாடிக்கொண்டு அங்கிருந்து அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறேனா? நான் களத்தில் இருக்கிறேன். நடிகர் விஜய் வீட்டில் இருந்துகொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்”

என்று விமர்சித்திருந்ததார்.

வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருவதால் இது தொடர்பான பணிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்., தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 28-ந்தேதி நடைபெற உள்ளது.  கூட்டம் நடைபெற உள்ள திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாமை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம்,.

“கட்சியின் தலைவர் விஜய் வழியில், அவரது அறிவுறுத்தலின்படி மக்கள் சேவை செய்வதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம். மற்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”

என்று தெரிவித்தார்.