சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி உள்ள தவெக கட்சி தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இன்று முதல் நபராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கி உள்ளது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்து வரும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நடிகரும், த வெக தலைவருமான ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் வியாசர்பாடி பகுதியில் உள்ளதால், அங்கு வந்தது வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதேபோல வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பெரம்பூர் தொகுதியில் விஜயை எதிர்த்து, திமுக சார்பில் ஆர்டி.சேகர் களமிறங்குகிறார். அதிமுக கூட்டணி சார்பில், பாமக வேட்பாளர் திலகபாமாவும், நாம் தமிழர் கட்சி சார்பில், வெற்றித்தமிழனும் களமிறங்குகின்றனர்.

[youtube-feed feed=1]