சென்னை: பிற மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் நுழைய ‘இன்னர் லைன் பர்மிட்’ முறை கொண்டு வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, அஞ்சல்துறை உள்பட பொதுத்துறை நிறுவனங்களில் உள்பட பணியிடங்களுக்கு வடமாநிலத்தவர்களுக்கே மத்தியஅரசு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. நமது மாநிலத்தைவரை புறக்கணிக்கும் செயல்களுக்கு எதிராக பலமுறை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை போராட்டங்கள் மூலம் பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் மத்திய அரசின் போக்கில் மாற்றம் நிகழவில்லை.
இந்த நிலையில், தமிழ்க வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன், வட இந்தியர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழைபவர்களுக்கு ‘இன்னர் லைன் பர்மிட்’ முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துதி உள்ளார். தமிழர்களுக்கான வேலைகள் பறிக்கப்படாமல் இருக்க இது அவசியம் என்று கூறி உள்ளார்.