பன்முகத்திறமை கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், காவல்துறையினரின்  விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரது கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த 14-ம் தேதி  கைது செய்தனர்.

சித்ரா திருமணம் செய்து 2 மாதமே ஆனதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யா  கடந்த 14ந்தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த விசாரணைக்கு  சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் மற்றும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது  பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  மேலும், அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர்- நடிகைகள்,  நெருங்கிய நண்பர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து,   சித்ரா தற்கொலை தொடர்பாக கோட்டாட்சியரின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆர்டிஓ சித்ரா அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது அறிக்கையைத்தொடர்ந்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]