தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர், பிரபல நடிகர் ரஜினியைப் பார்த்து யார் என்று கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அரசியல் பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோரை கடுமையாக பேசி திருப்பி அனுப்பிவருகிறார்கள் மக்கள்.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். அப்போது பாதிக்கப்பட்ட ஒருவர், ரஜினியைப் பார்த்து, “யார் நீங்க?” என்றார்.
அதற்கு ரஜினி, “நாநஅ ரஜினிகாந்த். சென்னையிலருந்து வந்துருக்கேன்” என்றார்.
அதற்கு அந்த போராட்டக்காரர், “ஓ..! 100 நாள் நாங்க போராடுன போது சென்னை ரொம்ப தூரத்துல இருந்துச்சோ..” என்று ஆதங்கமாக கேட்டார்.
இதனால் ரஜினி அதிர்ச்சிக்குள்ளானார். ஆனால் அதை வெளிக்காட்டாமல், சிரித்தபடியே, “சரி தம்பி வரேன்.” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார்.
அந்த வீடியோ: