சென்னை:
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்தனர். இதுகுறித்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதசீன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையம் ஏற்கனவே 9 கட்ட விசாரணையை முடித்துவிட்ட நிலையில், 10வது கட்ட விசாரணையை இன்று தொடங்கி உள்ளது.
உயர்க்கொல்லி நோய்கைளை உருவாக்கி அந்தபகுதி மக்களை சிறுக சிறுக கொன்று வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணையம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்பட சுமார் 200 பேரிடம் இதுவரை 9 கட்டங்களாக விசாரணை நடத்தி உள்ளது. அடுத்தக் கட்ட விசாரணைக்கு ஆஜராகுமாறு 47 பேருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 10-வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. சம்மன் பெற்றவர்கள் இன்று ஒவ்வொருவராக விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த விசாரணை இன்று முதல் 10ந்தேதி வரை நடைபெறுகிறது.