கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி மாவட்டம்

அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியைக் வேண்ட, அகத்திய மாமுனிவரின் அறிவுரைப்படி, ஜீவ நதியான தாமிரபரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், கைலாசநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார். அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களாவன:

1. பாபநாசம்

2. சேரன்மாதேவி

3. கோடகநல்லூர்

4. குன்னத்தூர்

5. முறப்பாடு

6. ஸ்ரீ வைகுண்டம்

7. தென் திருப்பேரை

8. இராஜபதி

9. சேர்ந்த பூமங்கலம்

இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு இலிங்கம் மட்டுமே இருக்கிறது. அம்பாள், பரிவார தெய்வங்கள் யாரும் இல்லை. இங்குள்ள இலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. இலிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலம் பற்றி தெரிந்த பக்தர்கள் மட்டும் இங்கு வருகின்றனர். பக்தர்கள் இந்த இலிங்கத்தை வழிபட்டு, அருகிலுள்ள மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். பக்தர்களும், அறநிலையத்துறையினரும் மனது வைத்தால் இத்தலத்தில் புதிய கோயில் எழுப்பி, நவகைலாயத் தலங்களை முழுமை செய்த புண்ணியத்தைப் பெறலாம்.

நவ கைலாயத்தில் இது கேது வணங்கிய ஸ்தலம். ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களும், கேதுவின் ஆதிக்கத்தில், உள்ளவர்களும், கேது ஸ்தலமான, காளகஸ்திக்கு நிகரான இராஜபதியில் வழிபடுவது சிறப்பு.

திருவிழா:

திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு

கோரிக்கைகள்:

ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை