அங்காரா:
ந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.

துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு முன்னர் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த எட்டு நாடுகளை தவிர பிற நாட்டினர் 14 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு துருக்கிக்குள் வரலாம்.அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக மாட்டர்கள். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகி இருந்தாலும் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதைத் தொடர்ந்து அந்நாடுகள் மீது ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

துருக்கியை பொறுத்தவரை அங்கு 52 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். துருக்கியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அங்கு தடுப்பூசி செலுத்துவதை எர்டோகன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது.