Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
உலகம்

ரகசிய தகவலை வெளியிட்டதாக 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை! துருக்கி அரசு

Sep 11, 2020

இஸ்தான்புல்: அரசின் ரகசிய தகவலை வெளியிட்ட குற்றத்திற்காக துருக்கி நாட்டில்  5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் அங்கு சமீபத்தில் கொலை செய்யப்பட்ட, தேசிய நுண்ணறிவு அமைப்பின் ஊழியர்களுடைய புனைப் பெயர்களை  ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக துருக்கி அரசு அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. இது தொடர்பான வழக்கு  இஸ்தான்புல் கோர்ட்டில்  நடைபெற்று வந்தது. அப்போது, பத்திரிகையாளர்கள், அரசின் ரகசியத்தை வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக பரபரப்பான விசாரணை நடைபெற்று முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில்,பேரிஸ் டெர்கோக்லு, எரன் எகின்சி ஆகிய 3 பேர் குற்றமற்றவர்கள் என கூறி கோர்ட்டு விடுதலை செய்து விட்டது. மற்ற 5 பேர்களும்   குற்றவாளிகள் என்று உறுதி செய்து அவர்களுக்கு தண்டனை அறிவித்தது.

பேரிஸ் பெஹ்லிவன் மற்றும் ஹூல்யா கிலிங்க் ஆகிய இருவருக்கும் தலா 45 மாதங்கள் சிறைத்தண்டனையும், முரார் அகிரல், பெர்ஹட் செலிக் மற்றும் அய்தின் கெசர் ஆகிய 3 பேருக்கு தலா 56 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. எரிக் அகாரர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரேநேரத்தில் 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதித்திருப்பது துருக்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post navigation

“ஓரின திருமணத்திற்கான தண்டனையே கொரோனா” – இதைக்கூறிய மதகுருவுக்கே இப்போது கொரோனா..!
நவாஸ் ஷெரீப் ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி – பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு!

Related Post

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer