சியோல்:

வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து 200 பேர் பலியாகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விழுந்தது, இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று ஜப்பானின் அஷாகி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதும் 100 பணியாளர்கள் பலியாகினர். அப்போது நடந்த மீட்டு பணிகளின் போது மீண்டும் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதில் மொத்தம் 200க்கும் அதிமானோர் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி வடகொரியா 100 கிலோ டன் எடை கொண்ட ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்தது.

இதனால் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை கூடமே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. 1945-ம் ஆண்டு ஹிரோசிமாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது பயன்படுத்திய குண்டை விட இது 7 மடங்கு அதிக சக்திவாய்ந்தது என தெரிவிக்கப்பட்டது.

தொடர் சோதனை காரணமாக பரிசோதனை கூடம் பலவீனமாகி இருந்துள்ளது. பொருளாதார தடை, சர்வதேச அளவில் தனிமை என பல்வேறு நிலைகளில் நெருக்கடியை சிக்கி வரும் வடகொரியாவுக்கு இது மேலும் ஒரு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.