மதுரை: மதுரையில் அமைய இருந்த டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் கைவிட காரணமாக இருந்த மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு விழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக மத்தியஅமைச்சர் கிஷன் இன்று தமிழ்நாடு வருகை தந்துள்ளார்,.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சுரங்க திட்டத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோருக்கு அ.வள்ளாலப்பட்டி மக்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இதற்கிடையே பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சென்னை வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்

துரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டதிற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் பாராட்டு விழா  இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்காக சென்னை வந்த மத்தியஅமைச்சரை மாநில தலைவர் அண்ணாமலை சால்வை அணிவித்து வரவேற்றார்.

மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்க திட்டம் வருவதற்கு மக்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த சுரங்கம் தொடர்பாக கடந்த ஆட்சியாளரான அதிமுகவும், தற்போதைய ஆட்சியாளரான திமுகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தன. இதனால், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை சென்று அப்பகுதி மக்களை சந்தித்து, சுரங்கம் அமைக்கும் முடிவை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதுடன், மத்திய அமைச்சரை கிஷன் ரெட்டியை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகன் மற்றும் டங்ஸ்டன் போராட்டக் குழுவினருடன் சென்று சந்தித்தார்.  இதையடுத்து,  டங்ஸ்டன் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்தது.

இதற்கிடையில்,  தமிழக சட்ட சபையில் டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், பாஜக தரப்பில் மீண்டும் டங்ஸ்டன் போராட்டக்குழுவினரை டெல்லி அழைத்துச்சென்று அண்ணாமலை பேசினார். இதையடுத்து,  இதனை தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது மதுரை மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து டங்ஸ்டன் போராட்டக்குழுவினர் தங்களது போராட்டத்துக்கு ஆதரவு அளித்த திமுக, அதிமுக, பாஜக உள்பட  அரசியல் கட்சியினரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்தனர்.

இதற்கிடையில், தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தியின் அறிவுறுத்தலின் பேரில் திடீரென மதுரையில், டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை ரத்து செய்ய காரணமாக இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என அறிவிக்கப்பட்டு, ஜனவரி 26ந்தேதி அன்று பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விவகாரம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு இன்று நன்றி தெரிவிக்கும் விழா அரிட்டாப்பட்டி உள்ள அந்த கிராம மக்களின் சார்பாக நடத்தப்படுகிறது.  அதில் கொள்ள மத்திய அமைச்ர் இன்று மதுரை வருகை தந்திருக்கிறார். அவரை மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து கிஷன் ரெட்டி, இன்று பிற்பகல்,  ர் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களை சந்திக்க உள்ளார். டங்ஸ்டன் சுரங்கத் திட்டதிற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று மாலை நடைபெற உள்ளது

டங்ஸ்டன் திட்டம் ரத்து: நாளை மதுரை வருகிறார் மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டி…