சென்னை:  தமிழ்நாடு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் டங்ஸ்டன் தொழிற்சாலை அனுமதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது

கடந்த மாதம் 25ந்தேதி அன்று  செய்தியாளர்களை சந்தித்த சபாநயாகர் அப்பாவு,  டிசம்பர்  9-ந்தேதி தமிழக சட்டசபை கூடும் என கூறிய நிலையில்,   கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து,  அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை கூட்டி  முடிவெடுப்போம் என்றார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால  கூட்டத்தொடர் இரு நாட்கள் மட்டுமே நடைபெறும் என தமிழக சட்டமன்ற செயலகம் அஜெண்டா வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஏனைய சட்ட முனவுகள் குறித்து ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் மற்றும் ஏழைய அரசின் அலுவல்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேரவையில், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், டங்ஸ்டன் சுரங்கம் தோண்டும் பணியை கைவிட மத்தியஅரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும்,  அதாவது, மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்டுவதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமங்களை ஏலம் விடக் கூடாது என்றும் வலியுறுத்தி  தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், மேலும்,  மானிய கோரிக்கை விவாதங்கள்,  நிதி ஒதுக்குதல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, இனறு காலை சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்தொடரில், மதுரை டங்ஸ்டன் சுரங்கம், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சட்டசபை கூட்டத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதற்கிடையில்,  மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்டுவதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமங்களை ஏலம் விடக் கூடாது என்றும் வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியிருந்தார். அதுதொடர்பாக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டபேரவை டிசம்பர் 9ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு தகவல்…