சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சரும், டிடிவியின் தீவிர ஆதரவாளருமான பழனிய்பப்பன் இன்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது அதிமுக, அமமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த நிலையில், டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வியை அடைந்தது. இதையடுத்து, அங்கிருந்து பல நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளை நோக்கி ஓடிச்சென்று கொண்டிருக்கின்றனர். திமுகவில், அதிமுக,அமமுக கூடாரத்தில்  இருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின.

அதன்படி, முன்னாள் அதிமுக அமைச்சரும் டிடிவி தினகரனின் ஆதரவாளராகவும் அமமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் உள்ள பழனியப்பனையும் திமுகவுக்கு இழுக்கும் முயற்சியில் நடைபெற்று வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில், இன்று பழனியப்பன், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார்.

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுகவில் முக்கிய தலைவர்கள் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவரை இழுக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வந்ததாகவும், இதில் வெற்றிகண்டதாகவும் கூறப்படுகிறது.