புதுச்சேரி,

எம்ஜிஆர் பிறந்தநாளான நாளை தனிகட்சி குறித்து கூறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து நாளை அறிவிப்பதாக டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு ஆளும் அதிக அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் உள்ள தனது பண்ணை வீட்டில் பொங்கல் கொண்டாடினார் டிடிவி தினகரன்.  அதைத்தொடர்ந்து இன்று, அங்கிருந்து கிளம்பினார்.

அவர் புறப்படும் முன் கூட்டு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்து தமிழகத்துக்குத் தேவையான நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்.  மத்திய அரசால் மட்டுமே தமிழகத்துக்குத் தர முடியும், தமிழக அரசு கேட்கத்தான் முடியும், அவர்களைக் குறைகூற முடியாது என்று கூறினார்.

குருட்டு அதிர்ஷ்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதால் காவிரி நீரை தமிழகத்துக்குப் பெற மத்திய அரசிடம் கோரிக்கைதான் வைக்க மட்டுமே முடியும் என்றார்.

அதிமுகவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள  18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் எதிர்த்த வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று,இ

மேலும், தற்போது  இரட்டை இலை தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது. அதை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன் என்றும் கூறினார். அ.தி.மு.க-வின் சட்ட திட்டத்தின்படி பெரும்பான்மையான தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள் எனப் பார்க்காமல், தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதற்கு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எனக்கு வெற்றியைத் தந்து நிரூபித்துள்ளனர். ஒன்றரைக் கோடி தொண்டர்களின் எண்ணத்தை ஆர்.கே. நகர் மக்கள் பிரதிபலித்துள்ளனர்.

மேலும் பேசுகையில், தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக, நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவுசெய்வோம் என்றும், ஏற்கனேவே இதுபற்றி  அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் விவாதித்து சம்மதமும் வாங்கி விட்டோம் என்றார்.

எங்கள் அணி சார்பில் வர இருக்கிற  உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் எனவும்  கூறினார்.