டெல்லி:
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்ட டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.
அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பிணைத்தொகை செலுத்துவது உள்ளிட்ட மற்ற சட்ட ரீதியான நடைமுறைகள் முடித்துக் கொண்டு, திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோர் இன்று வெளியில் வந்தனர்.