சென்னை:

திமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் இன்று பெங்களுர் செல்கிறார்.

அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக எடப்பாடியின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் உள்ளது.

இந்நிலையில்,  அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தான் மீண்டும் கட்சியில் தீவிர பணி ஆற்றப்போவதாக அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

இந்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவை டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

சசிகலா கேட்டுக்கொண்டதால் அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கையிலும்  60 நாட்கள் ஈடுபடாமல் இருப்பதாக கூறியிருந்த  தினகரன் தற்போது அதற்கான கெடு முடிவடையும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சசிகலாவிடம்  ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆகஸ்ட்.5-ம் தேதி சென்னை தலைமை அலுவலகத்துக்கு வருமாறு, மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் டிடிவி தினகரனின் பெங்களூரு பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.