ரஷ்யாவின் கிழக்கே கம்சாத்கா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 8.7 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜப்பான் கடற்கரையை நோக்கி அலையலையாய் சுனாமி அலைகள் வரும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

2006ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ராவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் சுனாமி கோரத்தாண்டவமாடியது.

தற்போது ரஷ்யாவை ஒட்டி பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான், சீனா மட்டுமன்றி ஹவாய் தீவுகள் வரை சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.