கான்பெரா: ஆஸ்திரேலியா அருகில், பசிபிக் கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ கேலடோனியா பகுதிக்கு அருகில், கடலடியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், அந்த நிலநடுக்கம் 5.6 மற்றும் 7.6 என்பதாக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 11.32 மற்றும் அதிகாலை 12.20 காலஅளவில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நியூ கேலடோனியா தீவுக் கூட்டங்கள், ஆஸ்திரேலியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து, கிழக்கே பசிபிக் பெருங்கடலில் 1800 கி.மீ. தொலைவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் கூட்டு சுனாமி எச்சரிக்கை மையமானது, அந்நாட்டின் லார்டு ஹோவே தீவிற்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடலுக்கடி கண்காணிப்பின் மூலம், பூகம்பத்தால், சுனாமி அலைகள் உருவாகியுள்ளது உறுதிசெய்யப்பட்டது.

சுனாமி தாக்கும் அபாயமுள்ள பகுதி மக்கள், மேடான பகுதிகளுக்கம், குறைந்தபட்சம் கடற்பரப்பிலிருந்து 1 கி.மீ. உள்ளேயும் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த சுனாமி எச்சரிக்கை ஆஸ்திரேலியாவின் முக்கியப் பகுதிக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.