உலகளாவிய அளவில், கொரோனா தடுப்பு மருந்து குறித்த நம்பிக்கை விகிதம், நாடுகளைப் பொறுத்து மாறுபடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மொத்தம் 15 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பிரான்ஸ் நாட்டில், தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த சந்தேகம் அதிகமாக உள்ளது. ‍மேலும், சில ஆசிய நாடுகளிலும் இந்த நிலை உள்ளது.

ஆனால், வேறுசில ஐரோப்பிய நாடுகளிலோ, கொரோனா தடுப்பு மருந்து குறித்த நம்பிக்கை அதிகளவில் காணப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தடுப்பு மருந்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மொத்தம் 15 நாடுகளில், 13500 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 40% பங்கேற்பாளர்கள் மட்டுமே தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியதாக தெரியவந்துள்ளது.

பிரிட்டனைப் பொறுத்தவரை, மொத்தம் 78% பேரும், டென்மார்க்க‍ைப் பொறுத்தவரை 67% பேரும், கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் 44% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், கடந்தாண்டு நவம்பரில் இருந்த 15% மற்றும் இந்தாண்டு ஜனவரியில் இருந்த 30% ஆகியவற்றோடு ஒப்பிடுகையில், தற்போது அதன் அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.