பூரி
பூரி ஜகன்னாதர் ஆலயப் பணம் ரூ.545 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
யெஸ் வங்கியில் வாரக்கடன்கள் அதிகரித்ததால் நிதி நிலைமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் பொறுப்புக்களை ரிசர்வ் வங்கி ஏற்றுக கொண்டு இயக்குநர்கள் அமைப்பைக் கலைத்துள்ளது. அத்துடன் யெஸ் வங்கியின் நிதி நிலை காரணமாக வாடிக்கையாளர்கள் வரும் 3 ஆம் தேதி வரை ரூ50000 மட்டுமே கணக்கில் இருந்து இடுக்க முடியும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த வங்கியில் இந்தியாவின் புகழ்பெற்ற பல தேவஸ்தானங்களின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் திருப்பதி, பூரி, ஆகிய கோவில்களின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று திருப்பதி கோவிலின் பணம் சில தினங்களுக்கு முன்பு வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பூரி ஜகன்னாதர் ஆயலத்தின் பணம் ரூ.545 கோடி இந்த வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியில் இருந்து ரூ.50000 க்கு மேல் பணம் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளதால் இக்கோவில் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.