மணிப்பூர்,

ணிப்பூர் மாநில தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. முதல் கட்டமாக  மார்ச் 4 ந்தேதியும், இரண்டாவது கட்டமாக  மார்ச் 8ந்தேதிந்தேதியும் நடைபெற்றது.

இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அணி மாறாத வகையில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தற்காத்து வருகிறது. மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களையும், பா.ஜ.க. 21 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்று இருந்த நிலையில், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தது.

இதன் காரணமாக  பா.ஜ.க.வின் பலம் 33 ஆக அதிகரித்தது.  அதையடுத்து பா.ஜ.க ஆட்சி அமைக்க முன்வந்தது. அதைத்தொடர்ந்து பாஜகவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அழைத்தார். அதன்பின்,  பா.ஜ.க.வின் பிரேன் சிங் சட்டப்பேரவைக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபை கூடுகிறது. அதில் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக பாரதியஜனதா தனது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும், தமிழக எம்எல்ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டதுபோல,  மணிப்பூரில் பாரதிய ஜனதா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் கவுகாத்தியிலும் காங்கிரஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்களை இம்பாலிலும் அடைத்துவைத்து கண்காணித்து வருகின்றனர்.

பரபரப்பான சூழ்நிலையில்இன்று நடைபெற இருக்கும் சட்டமன்ற வாக்கெடுப்பில்பா தியஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது கவிழுமா என்பது தெரிய வரும்.