நம்பிக்கை வாக்கெடுப்பு: கவர்னர் உத்தரவிட ஸ்டாலின் கோரிக்கை

சென்னை,

திமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைப்பு காரணமாக டிடிவி தினகரன் அணியினர் கவர்னர் சந்தித்து, முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக எம்எல்ஏக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக பேசி வரும் பிரதமர் மோடி,  ஊழல் அணிகள் ஆட்சிப்பொறுப்பில் அமரதுணை நின்றுள்ளார் என்றும்,   அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அதற்காக தமிழக சட்டமன்றத்தை கூட்ட  ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் வற்புறுத்தினார்.

உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும். கோரிக்கை விடுத்துள்ளார்.

 
English Summary
Trust vote against edappadi government: Stalin's request to the Governor