ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்த டிரம்ப்பின் அந்த முடிவு என்ன?

Must read

வாஷிங்டன்: அமெரிக்காவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, இறைச்சிப் பதப்படுத்தும் நிலையங்களை திறந்து வைக்க அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த முடிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.

உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் மிக அதிகம். அந்நாட்டில் இறப்பு எண்ணிக்கை 60000 என்பதை நெருங்கி வருகிறது. அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு பல மாகாணங்களில் நீட்டிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இறைச்சிப் பதப்படுத்தும் நிலையங்களைத் திறந்து வைக்க அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்ப்பின் உத்தரவை பலர் வரவேற்றிருந்தாலும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. ஆனால், உணவு பதப்படுத்தும் நிலையங்களில் பணியாற்றும் 3,300 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; அதில் 20 பேர் பலியாகி உள்ளதால், உணவு பதப்படுத்தும் நிலையங்களை திறக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

More articles

Latest article