வாஷிங்டன்:

வடகொரியா அதிபர் கிம் ஜாங்.குடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ளளார்.

இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா இன்று அறிவித்தது. இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,‘‘வடகொரியாவின் ஆக்கப்பூர்வமான இந்த அறிவிப்பு நல்ல செய்தியாகும். இந்த முடிவு நீண்டகால அமைதி மற்றும் நீடித்த வளமையை பாதுகாக்கும். இது எது வரை போகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.