வாஷிங்டன்: தான் நடத்திவந்த அறக்கட்டளையின் நிதியை, தனது அரசியல் செலவுகளுக்காகப் பயன்படுத்தினார் என்ற குற்றத்திற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு இந்திய மதிப்பில் ரூ.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
‘டெனால்ட் ஜே டிரம்ப் ஃபவுண்டேஷன்’ என்பது அடிரம்ப் அறக்கட்டளையின் பெயர். இந்த அறக்கட்டளை சார்பில், முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக நிதி திரட்டினர்.
ஆனால், அந்த நிதியை, கடந்த 2016ம் ஆண்டு தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அந்த செலவுகளுக்காக அவர் பயன்படுத்திக்கொண்டார் என்பதே குற்றச்சாட்டு.
இதனையடுத்து, நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நடந்துவந்தது. வழக்கு விசாரணையின் இறுதியில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ரூ.14 கோடி அபராதம் விதித்து நீதிபதி சேலியன் ஸ்கார்புலா தீர்ப்பளித்தார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் செலுத்தும் அபராதத் தொகை, அவருக்கு தொடர்பில்லாத வேறு 8 அறக்கட்டளைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.