வாஷிங்டன்
இந்தியா குறைத்துள்ள மோட்டார் சைக்கிள்களுக்கான ஏற்றுமதி வரி 50% ஒப்புக்கொள்ள முடியாத அளவில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யபடும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஏற்றுமதி வரியை அமெரிக்கா விதிப்பதில்லை. இதைப் போலவே இந்தியாவும் இங்கிருந்து அமரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகும் மோட்டார் சைக்கிள்களுக்கு வரி விதிக்காமல் இருந்தது. தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக ஏற்றுமதி வரியாக 100% விதிக்க தொடங்கியது.
இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், “நாங்கள் முட்டாள்கள் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை. இந்தியாவை பாருங்கள். அங்கு ஆட்சி செய்யும் மோடி எனது நெருங்கிய நண்பர். ஆயினும் அவர்கள் என்ன செய்துள்ளனர் என்பதை கவனியுங்கள். நமது மோட்டார் சைக்கிளகளுக்கு நாம் வரி விதிப்பதில்லை. அவர்கள் 100% வரி விதித்துள்ளனர்.
நான் இது குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் உடனடியாக வரியை 50% ஆக குறைப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதல்ல என்பதையும் நான் தெரிவித்துள்ளேன். அவர் அது குறித்து கணக்கிட்டு விட்டு பிறகு மேலும் குறைப்பதாக தெரிவித்தார். என்னை பொறுத்தவரை வரிகள் முழுமையாக குறைக்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.