வாஷிங்டன்

மெரிக்காவை நியாயமற்ற முறையில் உலக வர்த்தக அமைப்பு நடத்துவதால் அதிலிருந்து விலக தயங்க மாட்டோம் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  இந்திய அரசின் ஏற்றுமதி தடை காரணமாக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.  அப்போது டிரம்ப் மாத்திரைகளை அனுப்பாவிட்டால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டும் தொனியில் அறிக்கை விடுத்தார்.

தற்போது இந்திய அரசு ஏற்றுமதி தடையை நீக்கி மாத்திரைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

அடுத்ததாக உலக சுகாதார மையம் சீனாவுக்கு ஆதரவாக நடந்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டிய டிரம்ப் அமெரிக்காவில் இருந்து மையம் அதிக நிதி பெறுவதாகவும் அந்த நிதி உதவி நிறுத்தப்படும் எனவும் அடுத்த மிரட்டலை விடுத்தார்.  அதன் பிறகு இப்போது உலக வர்த்தக மையத்துக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” நம்பமுடியாத அளவிற்கு எங்களையும் பிற நாடுகளையும் சீனா சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. அவர்கள் வளரும் நாடாகக் கருதப்படுகிறார்கள்  என்பதால் சீனாவுக்குப் பெரிய நன்மைகள் கிடைக்கின்றன.  சீன வளரும் நாடாக இருப்பதால் அவர்களுக்குப் பல நன்மைகள் வழங்கப்பட்டன.

அதே வேளையில் அமெரிக்கா பெரிய வளர்ந்த நாடு.எனவும் ஏராளமான வளர்ச்சி உள்ளதாகவும் கருதப்படுகிறது இதனால் உலக வர்த்தக மையம் சீனாவுக்குச் சாதகமாக அமெரிக்காவைப் பயன்படுத்தியது.   சீனா அமெரிக்காவின் உதவியுடன் உலக வர்த்தக அமைப்பில் இணைந்தது.  அதன் பின்னர் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது.

சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர சீனா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அது அமெரிக்காவுக்கு மோசமான கால கட்டமாக மாறியது.   ஆகவே உலக வர்த்தக அமைப்பு ஒரு ஒழுங்கான வடிவம் பெற்று பாரபட்சமற்ற நிலையில் தனது  செயல்பாடுகளை மேம்படுத்தவில்லை எனில் நாங்கள் விலகத் தயங்க மாட்டோம்.” எனத் தெரிவித்துள்ளார்.