கிரிமினல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்டார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

2016 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்-பிற்க்கும் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. டிரம்ப் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட வைத்ததாக ஸ்டோர்மி டேனியல்ஸ் அப்போது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தை மூடி மறைக்க ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு குடியரசு கட்சியின் தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை டொனால்ட் டிரம்ப் வாரி வழங்கியுள்ளார்.

பின்னர், 2017 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பில் இருந்தார் 2020 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸ் தொடர்பான வழக்கு பூதாகரமாக வெடித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் மீது 30 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு அவர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல்முறை.

வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முக்கிய பிரிவின் கீழ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ள நிலையில் டிரம்ப்-பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தாமாக முன்வந்து சரணடைவதன் மூலம் ஜாமீன் பெற முடியும் என்று டிரம்ப் வழக்கறிஞர்கள் கூறியதை அடுத்து நீதிமன்றத்தில் சரணடைய புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நியூயார்க் நீதிமன்றத்திற்கு இன்றே புறப்பட்டுள்ளார் டிரம்ப்.

அதேவேளையில் டிரம்ப் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அவருக்கு கைவிலங்கு இடமாட்டார்கள் என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவருக்கு அன்று மாலையே ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

வழக்கு நடைபெற்ற நாட்களில் நீதிமன்றத்தின் முன் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பரபரப்பான இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதை அடுத்து நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் கடந்த இரண்டு நாட்களாக எந்த ஒரு ஆர்பாட்டமும் இன்றி அமைதியாக உள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய டொனால்ட் டிரம்ப்-பின் கிளம்பியதை அடுத்து வழிநெடுகிலும் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.