வாஷிங்டன்: வன்முறையைத் தூண்டும் வகையில், தான் இட்ட மூன்று பதிவுகளை டிவிட்டரிலிருந்து நீக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

டிவிட்டரிலிருந்து நிரந்தரமாக தடைசெய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே, இந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப்பின் கணக்கு 12 மணிநேரங்கள் முடக்கப்பட்டது. அதனையடுத்து, அவரின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படலாம் என்று தகவல் பரவியது. இதனையடுத்து, சர்ச்சைக்குரிய, வன்முறையைத் தூண்டும் வகையிலான தனது மூன்று பதிவுகளை டிவிட்டரிலிருந்து நீக்கியுள்ளார் டிரம்ப்.

தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், அதில் மோசடி நடைபெற்றுள்ளது என்று கூறிவரும் நிலையில், தலைநகர் வாஷிங்டனில் திரண்ட அவரின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில், நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.