அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி விசா காலாவதியான பிறகும் தங்கியிருக்கும் 3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே பலவித அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பதாக முதலில் அறிவித்தார். அதேபோல, உரிய விசா இல்லாதவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றப்போவதாகவும் அறிவித்தார்.
இது குறித்து தற்போது ட்ரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். அமெரிக்காவில் உரிய விசா இன்றி சுமார் ஒரு கோடி பேர் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 3 லட்சம் பேர் இந்தியர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது இவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ட்ரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.