அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துபோது, பேப்பரில் கையெழுத்து இடுவது போல் டிவிட்டரில் வெளியான புகைப்படம் தற்போது, டிரம்ப் மிதான மதிப்பை சீர் குலைத்துள்ளது. அவர் வெற்று பேப்பரில் கையெழுத்திட்டதாக, நெட்டிசன்கள் அவரை கேலிக்பொருளாக்கி உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை கேலிப்பொருளாக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிரடி செயல்களை செய்து பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்துவதில் வல்லவர். கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேலி செய்தவர், பின்னர் கொரோனாவின் தாக்குதலுக்கு ஆளானதும், இது கடவுளின் செயல் என்று கடவுள்மீது பலி போட்டதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், டிரம்ப் கொரோனா சிகிச்சைக்காக வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் இருந்துபோது, அவரது மகள் இவாங்கா டிரம்பால் வெளியிட்டப்பட்ட, டிரம்ப் கையெழுத்திடும் புகைப்படும் தற்போது கேலிக்குரியதாகி உள்ளது.
அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கடந்த 1ந்தேதி ( வியாழக்கிழமை) இரவு உறுதியானது. அவரது உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அவர், அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, டிரம்ப் சிகிச்சைக்கு பிறகு நல்ல உடல் நிலையில் இருக்கிறார். மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். வீட்டில் இருந்தே ஓய்வெடுக்லாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் சனிக்கிழமை முதல் பொது நிகழ்வுகளை மீண்டும் பங்கேற்க தொடங்கலாம் என வெள்ளை மாளிகை மருத்துவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை இரவு, டொனால்ட் டிரம்ப் மருத்துவமனையில் இருந்தபோது, அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மக்களுக்காக கடினமாக உழைக்கிறார் என்பதை தெரிவிக்கும் வகையில் புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டது, அந்த புகைப்படத்தை அவரது மகள் இவான்கா டிரம்ப் தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார், அத்துடன் “அமெரிக்க மக்களுக்கு வேலை செய்வதிலிருந்து அவரை எதுவும் தடுக்க முடியாது என்று கூறியுருந்தார்.
இந்த நிலையில், அவரது புகைப்படம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. வேலை செய்துபோல பாவ்லா காட்டி, வெற்று காகிதத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என நெட்டிசன்கள் அவரை கேலி செய்து வருகின்ணுறனர். இதனால், டிரம்ப் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை நெருக்கடி தொடர்கிறது, மருத்துவமனையில் கொரோனா வைரஸுடன் சண்டையிடும் போது அவர் வேலை செய்வதைக் காட்ட ஒரு வீண் முயற்சி என்று கேலி செய்யப்படுகிறது.
விமான வெளியீடான தி ஏர் கரன்ட்டின் தலைமை ஆசிரியர் ஜான் ஆஸ்ட்ரோவர், வெள்ளை மாளிகையால் பகிரப்பட்ட புகைப்படங்களில் பதிக்கப்பட்ட தரவுகளை உன்னிப்பாகக் கவனித்தார், மேலும் அவை 10 நிமிட இடைவெளியில் எடுக்கப்பட்டதைக் கண்டறிந்தன, ஆனால் ஜனாதிபதி இரண்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவதைக் காட்டினார்.
“வால்டர் ரீட்டில் பணிபுரியும் ஜனாதிபதியின் இன்றிரவு WH வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 10 நிமிடங்கள் இடைவெளியில் மாலை 5:25:39 மற்றும் மாலை 5:35:40 மணிக்கு ET சனிக்கிழமை எடுக்கப்பட்டன, இரண்டு AP கம்பி இடுகைகளிலும் பதிக்கப்பட்ட EXIF தரவுகளின்படி இன்று மாலை வெள்ளை மாளிகையால் பகிரப்பட்டது, ”என்று அவர் கூறினார்.
வெள்ளை மாளிகையின் நிருபர் ஆண்ட்ரூ ஃபைன்பெர்க்கும் புகைப்படங்களை ஆராய்ந்தார், அவற்றில் ஒன்றை பெரிதாக்கும்போது, திரு டிரம்ப் “தனது பெயரை ஒரு வெற்று காகிதத்தில் கையொப்பமிடுவதாகத் தெரிகிறது” என்பதைக் கண்டறிந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை டிவிட்டரில் “அரங்கேற்றப்பட்டது” என்ற வார்த்தை பிரபலமாக இருந்ததால், பலர் டிரம்பின் புகைப்படங்களுக்கு கேலிக்கூத்தாக பதிலளித்தனர்.
“நாங்கள் ரியாலிட்டி டிவி ஜனாதிபதி ஆட்சியில் வாழ்கிறோம்” என்றும் கிண்டல் செய்துள்ளனர்.
ஏராளமானோர் டிரம்பின் வெற்று பேப்பர் புகைப்படத்தை கடுமையாக விமர்சித்து உள்ளனர். ஏராளமானோர் டிரம்பின் கோமாளித்தனம் இதுவென கழுவி ஊற்றியுள்ளனர்.
“இந்த புகைப்படங்கள் அரங்கேற்றப்பட்டதில் பெரிய ஆச்சரியம் இல்லை – நீங்கள் பெரிதாக்கினால் அவர் வெற்று காகிதத்தில் கையெழுத்திடுவார் என்று சுட்டிக்காட்டியவர்களால் நான் மகிழ்ச்சியடைகிறேன் – ஆனால் அவர் இன்னும் முகமூடி அணிய மாட்டார் என்பது உண்மையிலேயே திகிலூட்டுகிறது,” என்று கூறினார் வரலாற்றாசிரியர் அலெக்ஸ் வான் துன்செல்மேன்.
இதனால் அதிபரின் உண்மையான உடல்நிலை மற்றும் அவரது நோயின் காலவரிசை பற்றிய ஊகங்கள், அவரிடமிருந்தும், அவரது மருத்துவரிடமிருந்தும் மற்றும் அவரது தலைமைத் தளபதியிடமிருந்தும் குழப்பமான மற்றும் முரண்பட்ட அறிக்கைகளுக்கு மத்தியில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்பின் போலி கைழுத்து நாடகம், அவர்மீதான மதிப்பை மேலும் சீர்குலைத்துள்ளது.