ஜனாதிபதி ட்ரம்ப் மறுதேர்தலில் தனது வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக ஒரே ஒரு தடுப்பு மருந்து மட்டுமேனும் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால், மருந்து நிறுவனங்கள் அவரின் அவசரத்திற்கு ஒத்துழைக்க தயாராக இல்லை. மிகவும் அசாதாரண நிகழ்வாக, ஒன்பது தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் – உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் உட்பட – கடந்த செவ்வாயன்று விரிவான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் டேட்டா இல்லாமல் அரசாங்க ஒப்புதலைப் பெற விண்ணப்பிக்க மாட்டோம் என்ற பொது உறுதிமொழியை வெளியிட்டனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட BIO வர்த்தக குழுவின் “எந்தவொரு தடுப்பு மருந்து அல்லது சிகிச்சையும் ஒரே மாதிரியான கடுமையான பாதுகாப்பு டேட்டாக்களுடன் மட்டுமே கிடைக்க வேண்டும்” என்று எச்சரிக்கும் கடிதத்தை ஒத்ததாக இது இருக்கிறது. இவை வெறும் சொற்கள் மட்டுமே, ஆனால் இப்போதே, இந்த வார்த்தைகள் டிரம்ப் கேட்க வேண்டியவை.
டிரம்ப் தனது அணியின் உறுப்பினர்களை வெளிப்படையாகவே துன்புறுத்தி வருகிறார். குறிப்பாக, உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹானை அவர் நடத்தும் முறையைக் கூறலாம். எனவே யாராவது ஒருவர் அப்பூனைக்கு மணி கட்ட வேண்டும். தேர்தல் நாளான நவம்பர் 3 நெருங்கிக் கொண்டுள்ளது. ஆனால், தடுப்பு மருந்து தயாரிப்பாளர்கள் இன்னும் தங்கள் மருந்துகளைச் சோதித்து கொண்டுள்ளனர். ஆயினும், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது டிரம்ப் ஏதேனும் ஒரு தடுப்பு மருந்து “நவம்பர் 1 க்கு முன்பே அக்டோபர் மாதத்தில் கூட தயாராகலாம்” என்று கூறி வருகிறார்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான்
இந்த உறுதிமொழியில் கையெழுத்திட்ட தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களான – ஃபைசர், மெர்க், அஸ்ட்ராஜெனிகா, சனோஃபி, கிளாஸ்கோமித்க்லைம், பயோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன், மாடர்னா மற்றும் நோவாவாக்ஸ் – மருத்துவ பரிசோதனைகளை விரைந்து முடிக்க செயல்பட்டு வருகின்றனர். ஆனால் ஃபைசர் மட்டுமே அக்டோபர் இறுதியில் முடிக்கும் வகையில் உள்ளது. ஆயினும் சோதனைகள் இன்னும் முடிக்கப்படவில்லை. ஆயினும் கூட, கோவிட் -19 தடுப்பு மருந்தின் ஆய்வு முடிவுகள் இல்லாமல் ஒப்புதல் வழங்க எஃப்டிஏ எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் டிரம்ப் தன்னை உயர்த்தி காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகவே கருதப்படும்.
டிரம்பின் ஒழுங்கற்ற மற்றும் சுயநலக்கருத்துக்களைக் கவனித்தால் இது தெளிவாகவே புரியும். எஃப்டிஏ தடுப்பு மருந்தின் ஒப்புதல் செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும், ஒரு செயல்படாத மாநிலத்தின் ஒரு பகுதியாக எஃப்டிஏ மாறி விட்டதாகவும் சமீபத்தில் அவர் குற்றம் சாட்டினார். தனது தேவைக்காக முன்கூட்டியே அவசரகால பயன்பாடாக முறையான முன்னேற்றம் இல்லாத மருந்துகளையும் அங்கீகரிக்க ஹானை வற்புறுத்துவார் என்பதில் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், ஹான் அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார் என்று வலியுறுத்தியுள்ளார், ஆனால் ஆரம்ப தரவுகளின் அடிப்படையில் அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
ஆனால் கோவிட் -19 இன் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்து முன் அனுபவமில்லாத பல நிகழ்வுகளை நாம் கண்டுள்ளோம் . “எஃப்டிஏ உடனான மோதல் தொடங்கி, ஜனாதிபதியின் வற்புறுத்தலுக்கு இணங்காத அதன் தலைவர் வரை பலவும்.”