ஹவோய்
வடகொரிய அதிபர் தன்னை கிழவன் என கூறியதற்கு ட்ரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டார். இந்த மாநாடு வியட்நாமில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிவிட்டரில் ஒரு தொடர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவின் விவரம் வருமாறு
”வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும் ராக்கெட் ஏவுகளை சோதனைகளையும் நடத்துவதற்கு சீன அதிமர் ஜின்பிங் தடை செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். வடகொரியா அணு ஆயுதம் உபயோகிப்பதை ஜிம்பிங் விரும்பவில்லை. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்னை கிழவர் எனச் சொல்லி கிண்டல் செய்துள்ளார். நான் அவரை குள்ளன் என்றோ குண்டர் என்றோ கூறவில்லை. ஆனால் அவர் என்னை இவ்வாறு சொல்லி என் மனதை புண்படுத்துகிறார். எனக்கு அவருடைய நன்பராக விருப்பம் உள்ளது. அதற்கு முயல்கிறேன். ஒரு நாள் அது நடைபெறலாம். நடந்தால் நல்லது” என டிவிட்டரில் ட்ரம்ப் பதிந்துள்ளார்.