வாஷிங்டன்

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி  வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கச் சரியான மருந்தை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன.  சமீபத்தில் கொரோனா தாக்குதலுக்கான தடுப்பூசி ஒரு பெண்ணுக்குப் போடப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஹைட்ராக்சிகுளோரோகின் மற்றும் அசித்ரோமைசின் ஆகிய இரு மருந்து கலவைகள் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.  இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

அவர் தனது பதிவில்,

“ஹைட்ராக்சிகுளோரோகின் மற்றும் அசித்ரோமைசின் இரண்டையும் சேர்ந்து உட்கொண்டால் மருத்துவ சரித்திரத்தில் மிகப் பெரிய மாறுதல் உண்டாக வாய்ப்புள்ளது.

மத்திய மருந்துக் கழகம் ஒரு மலையை நகர்த்தி உள்ளது. நன்றி.

இந்த இரு மருந்துகளும் இணைந்து மக்கள் மரணம் அடைவதை விரைவில் நிறுத்தும் என நம்புகிறேன்.

அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்”

எனப் பதிந்துள்ளார்.